மொழிகள்

பாடம் 7 காணொளி

பாடம் 7

கர்த்தருடன் நாம் ஜீவித்திருப்பதற்கான வாழ்வை வாழ்வதற்கு போராட அவர் நமக்கு சில சிறந்த கருவிகளை தந்துள்ளார். அவற்றை நாம் பயன்படுத்தவில்லை என்றால் நாம் தோல்வி அடைவோம்.

வாழ்வு குழப்பம் நிறைந்தது. உங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது என்று உங்களை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைக்கும் மார்கம் அல்ல கிறிஸ்துவ மார்கம். மாறாக, நம்முடன் பிறந்த இருளை போக்க கர்த்தர் நம் இதயங்களை பற்ற வைத்து அந்த ஒளியை வெளிப்படுத்த முனைகிறார். உலகம் நம்மிடம் எதிர்பார்க்கும் வாழ்வை வாழாமல், நம்முடைய உண்மை வாழ்வை வாழ வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

நாம் மறுபடியும் பிறந்து இருக்கிறோம், நமது மீத வாழ்வை வாழ நமக்கு தொடர்ந்து ஊட்டம் தேவை. நாம் ஒரு நாளைக்கு பல முறை சாப்பிடுகிறோம். நாம் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட மணி நேரம் தூங்குகிறோம். நாம் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் குடிக்கிறோம். புற வாழ்வின் தேவைக்கு உணவு, தூக்கம், தண்ணீர் ஆகியன போல ஆன்மீக வாழ்வின் தேவைக்கு பைபிள் வாசிப்பது, பிரார்த்தனை செய்வது மற்றும் மற்றவருடன் இணைந்து கர்த்தரை வழிப்பாடு செய்வது ஆகியன தேவை.

உலகம் களங்கம் மிக்கது. நாம் பரிசுத்தமானவர்களாக இருக்க நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நாம் வாழும் போது, ஒவ்வொரு நாளும், நமது உள்ளத்தின் மீது களங்கம் வீ்சப்படுறது. நமது கண்களின் மூலம், நாம் தவறான காட்சிகளை காண்கிறோம். சாபமான வார்த்தைகளை செவிகளின் மூலம் கேட்கிறோம். சக மனிதர்களுடனான மோதல்களால் நமது கரங்களை முட்கள் பதம் பார்க்கின்றன. நமது நாவின் மூலம், நாம கசப்பான விஷத்தை பருகுகிறோம். நமது நாசிகளின் மூலம், இறப்பின் வாசனையை நாம் நுகர்கிறோம்.

இந்த அசுத்தங்களை அகற்றுவதற்கு, களங்கங்களை தூர எறிவதற்கு, நம்மை சுற்றியுள்ள உலகத்தை மாற்றுவதற்கு கடவுள் நமக்கு தரும் கருவிகள் தான் என்ன?

முதலாவது, நாம் ஏற்கெனவே விவாதித்து இருப்பதைப் போல, அவர் நமது வாழ்வுக்கு அவர் வகுத்துள்ள பாதையை பைபிளில் வெளிப்படுத்தியுள்ளார். பைபிளின் வாசகங்களை நாம் வாசிக்கும் போது, கர்த்தர் நமக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை இதயத்தில் ஏற்றி வைக்கும் போது, நமது மனம் பரிசுத்தமாகும் , நமது இதயம் வலிமையாகும்.

இரண்டாவது, அவர் நமக்குள் பரிசுத்த ஆவியை ஊற்றியிருக்கிறார். எனவே, நாம் அவரிடம் பிரார்த்திக்கும் போது, அவர் நமக்காக முன்வருவதை நாம் உணர முடியும். இது, அவர் மீது நாம் கொண்ட விஸ்வாசத்தை உறுதிபடுத்தும். வாழ்வை நல்விதமாக வாழ்வதற்கான ஆற்றலைத் தரும், உலகை மாற்றும் வலிமையைத் தரும்.

மூன்றாவது, நாம் அவரை வழிபட்டு ஆராதிக்கச் செய்திருக்கிறார். நாம் அவரை வழிப்படும் போது, அவர் நம் ஆசைகளை நிறைவேற்றுகிறார், இந்த உலகம் நம் மீது சாற்றியுள்ள காயங்களை ஆற்றுகிறார்.

நான்காவது, நாம் மனிதர்களையும், விலங்குகளையும், அவர் படைத்த எல்லைக்கு உடபட்ட இந்த உலகத்தை நேசித்து மகிழ கற்று தந்திருக்கிறார். மற்றவர்களுடன் இணைந்து இந்த உலகை அனுபவித்து வாழ நாம் முன்னுரிமை வழங்கிக் கொள்ள வேண்டும்.

நாம் கர்த்தரை விஸ்வசித்து நேசிப்பது போலவே விஸ்வசித்து நேசிப்பவர்களோடு நேரம் செலவிட நாம் முன்னுரிமை வழங்க வேண்டும். இது நமக்கு ஊக்கத்தையும் வலிமையையும் தரும். நாம் சமநிலையில் இருந்து சரிவதை அது தடுக்கும். இதை தான் தேவாலயம் என்கிறோம். தேவாலயம் என்பது நாம் ஒன்று கூடுவதற்காக அல்லது வழிபாடு செய்வதற்காக கற்களினால் கட்டப்பட்ட ஒரு கட்டிடம் அல்ல. தேவாலயம் என்பது கர்த்தரையும் நம்மையும் நேசிக்கின்ற மனிதர்களை ஒருசேர குறிக்கும். மற்றவர்களோடு இணைந்து பைபிள் வாசிப்பது, பிரார்த்தனை செய்வது, வழிபாடு செய்வது, கர்த்தர் பைபிளில் கூறியுள்ள படி மற்றவர்களும் வாழ வேண்டிய வழிமுறைகளில் வாழ உதவுவது ஆகியவை எல்லாம் மிக முக்கிய அம்சங்களாகும்.

மற்ற கிறிஸ்துவர்களை சந்திப்பது எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பலருக்கும் ஆச்சிரியமானதாக உள்ளது. ஆனால், பைபிள் அதைத் தான் மிக முக்கிய அம்சம் என்கிறது. ஓர் அன்பான சமூகத்தை உருவாக்கவே இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்தார்: கர்த்தரில் பரிசுத்தமாகி கர்த்தரில் நிரம்பிய ஒரு சமூகம். அவர் உயிர்த்தெழுந்த பின் தமது நண்பர்களோடு உண்டு பருகினார், உடன் நடந்தார், அவர்களது வீடுகளுக்கு வருகை தந்தார் என பைபிள் சித்தரிக்கின்றது.

இது நமக்கு போதுமானதல்ல என்று நாம் நினைப்போமேயானால், பூசாரி ஒருவர் கூறிய சிந்தனையைத் தூண்டும் பின்வரும் இந்தக் கதையைக் கேளுங்கள்:

ஒரு நாள், ஒரு மனிதன் பூசாரி ஒருவரிடம் வந்து, “ தந்தையே, எனது சகோதரன் பவுல் என்னிடமிருந்தும் மற்ற கிறிஸ்துவர்களிடமிருந்தும் துண்டித்துக் கொண்டு விலகி வாழ்கிறான். அவன் முழு சம்மதத்தோடு மீண்டும் எங்களோடு இணைய அவனை நீங்கள் மெய்யறிவு ஊட்டி அழைத்து வரவேண்டும்!” என்றான்.

பூசாரி பவுல் வீட்டிற்கு சென்று கதவை தட்டி அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தார்.

உள்ளே நுழைந்ததும், குளிரில் வெப்பம் ஊட்டுவதற்காக அங்கே கனன்று எரிந்து கொண்டிருக்கும் ஒரு நெருப்பை பவுல் வெறித்து பார்த்துக் கொண்டிருப்பதை பூசாரி கண்டார். அவர்கள் அமை்தியாக வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பூசாரியும் பவுல் அருகே உட்கார்ந்து அந்த நெருப்பை வெறித்து பார்த்தார். சில நொடிகளுக்குப் பின், பூசாரி, அருகே இருந்த ஒரு உலோக குறடை எடுத்து ஒரு சிவந்த வெண்மையுடனான ஒரு கரித்துண்டை எடுத்தார், நெருப்பிற்கு வெளியே அதை தரையில் போட்டார். பவுலை தீர்க்கமாக பார்த்து புன்னகை செய்தார். சில நிமிடங்களில், அந்த கரித்துண்டு குளிர்ச்சியாகி அதனுள் எந்த நெருப்பும் இல்லாமல் போய்விட்டது.

பூசாரி, பவுலை மீண்டும் தீர்க்கமாக பார்த்து அந்த கரித்துண்டை மீண்டும் நெருப்பில் இட்டார். சில நொடிகளுக்கு பின், அந்த கரித்துண்டு மீண்டும் எரிய ஆரம்பித்தது. பூசாரி புன்முறுவல் பூத்து, இறுதியாக ஒரு முறை பவுலை தீர்க்கமாக பார்த்து விட்டு புறப்பட்டுச் செல்ல தயாரானார்.

அந்த கரித்துண்டு வேறு யாரும் அல்ல, நாம் தான் அந்த கரித்துண்டு. நம்மை சுற்றியுள்ளவர்களிடையே கனன்று எரியும் நெருப்பு இல்லை என்றால், நாம் குளிர்ச்சியாக, அந்த நெருப்பை நாம் இழந்துவிடுவோம். நாம் பைபிளை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். தினமும் பிரார்த்தனை மற்றும் வழிபாடு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முழு மனதோடு முயற்சிக்க வேண்டும். மற்ற கிறிஸ்துவர்களோடு இணைந்து நேரம் செலவிட வேண்டும். கர்த்தரின் கட்டளைக்கு விருப்பமுடன் கீழ்படிந்து வாழும் இனிய வாழ்வை வாழ ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும்.

நாம் இதை செய்யும் போது, கர்த்தர் நம்மை பலப்படுத்துவார், ஊக்கப்படுத்துவார், ஆசிர்வதிப்பபார். நாம் வேண்டிய நற்செய்தியை நம்மை போலவே வேண்டும் மற்றவர்களுடன் பகிர்வதற்கான வாய்ப்பை அதன் பின் வழங்குவார்.

மேலும் ஆராயுங்கள்

வாசிக்கவும் கலாத்தியர் 5:22-26, சங்கீதம் 121:1-8, and 1 கொரிந்தியர் 12:20 - 13:13. நாம் எவ்வாறு வாழ்வதை கர்த்தர் விரும்புகிறார் என்பது உங்களுக்கு தெளிவாகி இருக்கிறதா? இந்த தேவ வசனங்களை வாசிக்கும் போது உங்களுக்குள் பொங்கி எழும் அன்பை வாழ்வை வாழ்வதற்கான வலிமையை தரும்படி கர்த்தரை பிரார்த்தியுங்கள். நீங்கள் கொண்டுள்ள அன்பை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வழி என்ன என்று கேட்டால்? முதலில் அதை எழுதுங்கள், பின்பு அதை செயற்படுத்துங்கள்!