மொழிகள்

பாடம் 1 காணொளி

பாடம் 1

நமக்கு நற்செய்தி இருக்கிறது. இறைவனுக்கு கீழ்படிந்து அவரது கட்டளையை அன்புடன் கடைபிடித்து ஒழுகும் போது, நம்மை நேசிக்க, மன்னிக்க, முடிவுறாத நித்திய வாழ்வு அளிக்க, தீமையிலிருந்து விடுவிக்க, நெருங்கிய துணையாய் இருக்க இறைவன் நமக்கு உறுதி அளிக்கிறார்.

நீங்கள் இதை நம்புகிறீர்களா? அந்த வாழ்வு உங்களுக்கு தருவது என்ன என்று புரிகிறதா?

நாம் கடவுள் மீதுஅன்பு செலுத்தவும் கடவுளுக்கு கீழ்படியவும் கடவுளை என்றென்றும் அனுபவித்து உணரவுமே பிறந்து உள்ளோம், என்று பைபிள் கூறுகிறது, ஆனால், அது நம்மால் முடியவில்லை.

ஏன்?

ஏன் என்றால், பிறக்கும் போதே, நாம் இரண்டு காரணங்களால் கர்த்தரிடமிருந்து விலகி விடுகிகிறோம்.

முதலாவதாக, நமக்கு கர்த்தரை தெரியாது, நமக்கு தெரியாத ஒருவர் மீது அன்பு செலுத்த முடியாது.

இரண்டாவது காரணம், நாம் தீங்கான ஆசைகளுடன் பிறந்திருக்கிறோம். அவை கடவுள் தரும் வாழ்வு, அறிவு மற்றும் அன்பிலிருந்து நம்மை விலக்கி வைக்கின்றன. நமது தீங்கான ஆசைகளே இறப்பு, ஆரோக்கியமின்மை, அநியாயம், போர்— மற்றும் வாழ்வின் அனைத்து துக்கங்களுக்கும் காரணம் ஆகும்.

நமது தீங்கான ஆசைகள் கடவுளிடமிருந்து எவ்வாறு விலக்கி வைக்கின்றன?

தீமையின் வேர் சுயநலமே. தொடர்புறவுகளை எல்லாம் அது பாதிக்கிறது. ஒருவன் தன் மனைவியுடன் நெருங்கி பழகும் போது தனது வார்த்தைகள், செயல்கள் மற்றும் எண்ணங்கள் அவளை எவ்வாறு எல்லாம் காயப்படுத்தக்கூடும் என்பதை எளிதாக அடையாளம் காண்கிறான். கர்த்தருடனான நமது தொடர்புறவும் அது போலத் தான். நாம் கர்த்தருக்கு நெருக்கமாக நெருக்கமாக, நமது தீங்கு அந்த நெருக்கம் உண்டாவதை எவ்வாறு தடுக்கிறது என்பதை உணர முடியும்.

நாம் கர்த்தரிடமிருந்து விலகியிருத்தலுக்கு கர்த்தரின் மறுசெயல் என்ன?

மனிதன், கர்த்தரிடம் நெருக்கம் கொள்ளும் நிமித்தம் தேவகுமாரனாக பிறப்பு எய்தினார். அந்த மனிதர் தான் இயேசு.

எந்த வகையில் கர்த்தர் மனிதராக பிறந்தது முக்கியத்துவம் வாய்ந்தது?

முதலாவதாக, நம்முடன் தனிப்பட்ட தொடர்புறவை ஏற்படுத்திக் கொள்ள. இரண்டாவதாக, நமது சுக துக்கங்கள், இன்ப துன்பங்கள் மற்றும் போராட்டங்களை தாமும் அனுபவிக்க. மூன்றாவதாக, நாம் செய்த தீமைகளுக்கான தண்டனையை தாம் ஏற்று நம்மிடையே மரித்து போக. நான்காவதாக, மீண்டும் உயிர்த்தெழுந்து நமது தீமைகளை எல்லாம் போக்கி தம்முடனான நெருங்கிய நேசத்தை ஏற்படுத்தி என்றும் முடிவுறாத நித்திய வாழ்வை அளிக்க.

கடவுள் பாவங்களை தண்டிப்பார் என்பதை நமக்கு உணர்த்தும் முகமாகவே இயேசு உயிர் நீத்தார். பாவங்களை தண்டனையிலிருந்து தப்ப விடும் கடவுள், கடவுள் அல்ல. கர்த்தர் அதை செய்ய மாட்டார் என்பதற்கான உத்தரவாதமே இயேசுவின் இறப்பு. அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றாலும், நமது பாவங்களுக்காக அவர், தம்மையே தண்டித்துக் கொண்டார்.

நமது தீங்கான ஆசைகளிலிருந்து நம்மை விடுவித்து நமது இதயங்கள் பரிசுத்தம் ஆகி அவருடன் தூய உறவு கொள்வதே கர்த்தர் விருப்பம் ஆகும். இதைத் தான் பைபிள், ஒருவன் “மறுபடி பிறக்கிறான்” என்று குறிப்பிடுகிறது. அதன் அர்த்தம், ஒருவன் முழுமையாக உள்மாற்றம் அடைந்திருக்கிறான். தீங்கான ஆசைகளின் கட்டுப்பாட்டில் அவன் இனியும் அடிமையாய் இல்லை, கர்த்தருடன் நெருங்கிய நேசத்தில் இருக்கிறான்.

அப்படி என்றால், நமது பாவங்களுக்கான தண்டனையை இயேசு சுமந்ததோடு நற்செய்தி நிறைவு பெறவில்லை.

இயேசு இறந்த பின் மீண்டும் உயிர்த்தெழுந்தார், இப்போதும் உயிரோடு இருக்கிறார் என்று பைபிள் கூறுகிறது. நமது களங்கமான வாழ்வுக்கு பதிலாக ஒரு நிறைவான வாழ்வை மாற்றாக அளிக்கிறார். இந்த உன்னத பரிசை நாம் ஏற்கும் போது, அவரின் ஆன்ம உணர்வு நம்முள் வாழத் தொடங்கி மெதுவாக தீங்கான ஆசைகளை விலக்குகிறது. நன்மை மீதான் நமது தேடல் அதிகரிக்கின்றது.

பரிசுத்தமாகி நிறைவு எய்தும் இந்தச் செயல்பாடே புனிதப்படுத்தல் எனப்படுகிறது. இந்த வாழ்வு முடியும் வரை நாம் முழு நிறைவு எய்த முடியாது. ஆனால், இந்தச் செயல்பாடு நற்பலன்களை உடனடியாகத் தரத் தொடங்கும்.

ஆன்ம உழைப்பின் விளைவாக கனியும் நற்பலன்கள் ஆவன: அன்பு, மகிழ்ச்சி, நிம்மதி, பொறுமை, இரக்கம், நல்லெண்ணம், கனிவு, நம்பிக்கை மற்றும் சுய கட்டுப்பாடு. நாம் கிறிஸ்துவர்கள் என்றால், இந்த குணங்கள் நம்முள் வளரும். அவ்வாறு இல்லை என்றால், கர்த்தரிடம் சரண்டைந்து அவருடனான நேசத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பைபிளை வாசிக்க வேண்டும், தீங்கிலிருந்து விடுபட வேண்டும், பிரார்த்தனை செய்ய வேண்டும், கர்த்தரை வழிப்பட வேண்டும்.

ஆன்ம உழைப்பின் நற்கனிகளை நாம் விளைவிக்க முடியாது. கிறிஸ்து மீதான நமது நேசத்தை வெளிப்படுத்தும் போது, புனித ஆவியே அதை வெளிக்கொணார முடியும்.

நமது சிலுவைகளை சுமந்து இயேசுவை பின்தொடர வேண்டும் என்று பைபிள் கூறுகிறது. நமது சுயநலம் இறக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் குறியீடாக இந்த சொற்தொடர் உள்ளது. இயேசு தனது சிலுவையை(சித்திரவதைக்கான கருவி) தானே சுமந்து அதில் உயிர் மரித்தது போல, நமது சுயநலம் மரித்து போகும் படி செய்ய நாமும் அதையே உருவகமாக கொண்டு செய்ய வேண்டும்.

இது ஏன் முக்கியமாக கருதப்படுகிறது? நமது சுயநல ஆசைகள் கர்த்தரின் ஆசைகளைக்கு எதிராக இருக்கின்றன என்பதே இதற்கான காரணம். இயேசு முழுமையான விசுவாசத்தையும் சரணடைதலையும் எதிர்பார்க்கிறார். நமது சுயநல ஆசைகளைத் துறந்து அதற்கு பதிலாக கடவுளின் மீதான நேசத்தை வளர்த்துக் கொள்ளும்படி செய்கிறார். கர்த்தருக்கும் அவர் படைத்த மனிதர்களுக்கும் செய்யும் சேவையின் வாயிலாக அன்பை வெளிப்படுத்த வேண்டும்.

நாம் கர்த்தரிடம் சரணடைந்து ஒரே ஆன்ம துணையாக அவரை தேர்வு செய்யும் போது, அவரிடம் விரும்பி கீழ்படிதலுக்கான வலிமையை அவர் வழங்குவார். நாம் சுவாசிக்கும் காற்றாகவே கர்த்தர் ஆகிறார். உள் சுவாச மூச்சாக இயேசு. வெளி சுவாச மூச்சாக இயேசு. மீண்டும் தொடரவும். ஒவ்வொரு நாளும். நாம் இறக்கும் நாள் வரை. நமது பகைவர் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்று அவர் கட்டளையிடும் போது, அதை கடைபிடிப்பதற்கான துணிவையும் நம்பிக்கையையும் அதுவே வழங்கும். கர்த்தர் அதற்கு உதவுவார்.

இயேசுவுடனான நமது நேசமே நாம் அனுபவிக்க கூடிய அனைத்து விதமான நேசங்களையும் விட மிக நெருங்கியது ஆகும். காரணம், அவரது ஆன்ம உணர்வு நம்முள் இருக்கிறது. நீங்கள் கர்த்தருக்கு முழுவிசுவாசத்தோடும் அன்போடும் கீழ்படிவதால் கர்த்தருடனான இந்த நேசம் உங்கள் முழுவாழ்வையே நல்விதமாக மாற்றும். நீங்கள் தவறுகள் செய்யும் போது, அவற்றை திருத்தி அமைக்க கர்த்தர் உங்களுக்கு வழிக்காட்டுவார்.

தற்போது நீங்கள் அனுபவித்து வரும் வாழ்வின் இன்பங்களை இனி அனுபவிக்க முடியுமா என்னும் கேள்வி உங்களுள் எழலாம். கர்த்தருக்கு நாம் அன்போடு கீழ்படிந்து நடக்கும் போது கர்த்தரின் நிம்மதியையும் வாழ்வின் மகிழ்ச்சியையும் முழுமையாக அனுபவிக்க முடியும் என்பதை உங்களுக்கு நாங்கள் மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.

தீங்கான ஆசைகளிலிருந்து இந்த வாழ்வில் நாம் முழுமையாக விடுதலை பெற இயலாத போதிலும், நமது தவறுகள் நம்முடன் இன்னும் தொடர்ந்தாலும், இயேசு மீது நாம் கொண்ட நேசம் அந்த தீங்கான ஆசைகளின் வலிமையை இழக்கச் செய்கிறது. கர்த்தர் இதை செய்ய காரணம், நாம் இந்த உலகை, அவர் தந்த உறவுகளை பரிசுத்தமாக அனுபவித்து மகிழவே.

உங்களது ஆசைகளை நான் பரிசுத்தப்படுத்துவேன் என கர்த்தர் அளித்த இந்த உறுதியை நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நம்புவது கடினமாக இருக்கிறது. ஆனால், அவர் பரிசுத்தப்படுத்துவார் என்பதே உண்மை. அது சத்தியமான உண்மை. இல்லை என்றால் அதை நற்செய்தி என்று கூற முடியாது.

ஏன் நிறைய கிறிஸ்துவர்கள் நல்வாழ்வை வாழ்வது கிடையாது?

ஒவ்வொரு கிறிஸ்துவரும் தீமையிலிருந்து விடுபட்ட வாழ்வை வாழ முடியும், ஆனால், நாம் அவ்வாறு வாழ மறுக்கும் தருணங்கள் நிகழ்கின்றன. நாம் கிறிஸ்துவர்கள் ஆன போதும், சில நேரம் நாம் இயேசுவை மறந்து தீமையை தேர்ந்து எடுக்கிறோம்.

தீமையிலிருந்து விடுபட்ட வாழ்வை நாம் அனுபவிக்க முடியாமல் போவதற்கு காரணம் அந்த வாழ்வு சாத்தியம் என்பதை அவர்கள் நம்பாமல் இருக்கிறார்கள் அல்லது கர்த்தர் அளித்த அந்த உறுதியை நம்பாமல் இருக்கிறார்கள். மற்றவர்கள் தீமையிலிருந்து விடுபட்ட வாழ்வை வாழாமல் இருப்பது அது கடினம் என்பதால். கர்த்தரிடம் முழுமையாக சரண் அடைவது ஒரு நிபந்தனையாக இருக்கிறது.

இதன் அர்த்தம் என்ன?

நாம் சரண் அடைந்த பின், தொடர்ந்து சரண் அடைய கட்டளையிடப்படுகிறோம். இது தொடர் நிகழ்வாக இருக்க வேண்டும். நாம் நமது இயல்பால் சுயநலத்திற்குள் மீண்டும் விழுவோம். இதை மனிதனுக்கு உண்டான பாவ இயல்பு என்று பைபிள் கூறுகிறது. நாம் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை அது கூடவே இருக்கும் தன்மை வாய்ந்தது.

நாம் கர்த்தரை விசுவசித்து நம்பும் போது நாம் தீங்கை கைவிடுவம், பிரார்த்தனை செய்வோம், வழிபடுவோம், பைபிள் வாசிப்போம், மற்ற கிறிஸ்துவர்களுடன் இணக்கமாக வாழ்வோம். நமது உள்ளிருக்கும் கிறிஸ்துவின் ஆன்மா நம்மை வழிநடத்தி நமது ஆசைகளை பரிசுத்தப்படுத்தும். நமது பாவ இயல்புகளிலிருந்து விடுபட உதவும்.

வளர்ச்சிக்கு காலம் தேவைபடுகிறது. அந்த மெதுவான நிகழ்வின் காரணமாக நம்பிக்கை இழக்காதீர்கள். அது மெதுவான நிகழ்வு என்று குறை சொல்லி வளர்வதற்கான வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்.

கர்த்தருக்கு கீழ்படிந்து மகிமை செய்வது இந்த உலகில் இது வரை அனுபவித்திராத சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரும். தீங்கு கெட்டது, எனவே அதிலிருந்து விடுபெற வேண்டும். ஆனால், அது மட்டுமே காரணமல்ல்ல. கர்த்தர் நம்முள் நிறைய வேண்டும். அதற்காகவும், நாம் தீங்கிலிருந்து விடு பெற முயற்சிக்கிறோம்.

கர்த்தரை மகிமைபடுத்த நாம் அவரோடு இணைய அவர் அழைக்கிறார். நாம் கர்த்தரிடம் சரண் அடைந்த பின் நாம் கொண்டிருக்கும் இனிய நேசத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அவர் நம் உள்ளுணர்வைத் தூண்டுகிறார். அதுவே, சுவிசேஷம் என அழைக்கப்படுகிறது. மற்றவர்கள் அதை அனுபவித்து உணர கற்றுத் தருவது ஆன்மீக பயிற்சி மாணவனாக இருப்பதாகும்.

கர்த்தர் நமக்கு தரும் நல் அனுபவங்களை உணரும் போது, நம்மால் அதை பிறருக்கு கற்றுத் தராமல் இருக்க முடியாது. கர்த்தர் எவ்வளவு நன்மையானவர் என்று நாம் பருகி உணரும் போது, நாம் அனுபவிக்கும் பேரானந்த பெருநிம்மதியை மற்றவரும் அனுபவிக்க வேண்டும் என்று இயல்பாகவே நாம் விரும்பி அதை பிறருக்கும் சொல்வோம்.

ஆக, இதோ அந்த நற்செய்தி( ஆக சிறந்த செய்தி) இறைவனுக்கு கீழ்படிந்து அவரது கட்டளையை அன்புடன் கடைபிடித்து ஒழுகும் போது, நம்மை நேசிக்க, மன்னிக்க, முடிவுறாத நித்திய வாழ்வு அளிக்க, தீமையிலிருந்து விடுவிக்க, நெருங்கிய துணையாய் இருக்க இறைவன் நமக்கு உறுதி அளிக்கிறார். நம் வாழ்வின் இறுதி வரை ஆழ்ந்த விசுவாசம் உடையவராக இருந்தால் கர்த்தர் நித்திய வாழ்வு வாழ்வதற்கான புதிய உடலை தர உறுதி அளிக்கிறார். தீங்கான ஆசைகள், இறப்பு பிணி, மனச்சோர்வு போன்ற சாபங்களிலிருந்து அந்த உடல் விடுப்பட்டு இருக்கும்.

கெட்ட செய்தி என்னவென்றால் கர்த்தரின் அழைப்பை நிராகரிப்பவர்கள், தங்களது பாவத்தின் விளைவாக முடிவில்லாத தண்டனையை அனுபவித்து வேதனையுறுவார்கள். கர்த்தரிடமிருந்து விலக்கப்பட்டு இருப்பார்கள்.

கர்த்தர் அளித்த நற்செய்தியும் அதை மறுப்பதால் வரும் கெட்ட செய்தியும் நமக்கு உணர்த்துவது நற்செய்தியே நம் வாழ்வின் மிக முக்கியமான உண்மை என்று.

கர்த்தரை நாம் என்றொன்றும் மகிமைபடுத்தி அனுபவித்து உணரவே நாம் இருக்கிறோம். நமக்கு பிடித்த வாழ்க்கை மற்றும் கடவுளுக்கு பிடித்த வாழ்க்கை என இரண்டில் ஒன்றை நாம் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று பொதுவாக நினைத்துக் கொள்கிறோம். உண்மை என்னவென்றால் தீங்கான ஆசைகளுக்கு இடம் தரும் போது நமக்கே பிடிக்காத வாழ்வையே நாம் வாழ்கிறோம் என்று கொஞ்ச காலத்தில் உணர்வோம். தீங்கில் ஈடுபடுவது மனச்சோர்வு, சுய மதிப்பின்மை, தீங்கான ஒழுக்க முறைகளுக்கு இட்டுச் செல்கிறது. [45] தீங்கு நம்மை ஆளும் போது நமது மகிழ்ச்சியை உறிஞ்சுகிறது, நம்மை வெறுமையாக்கி தனிமையில் தள்ளுகிறது. நம்மை அடிமைகளாக்குகிறது.

தீமைக்கு அடிமையாக இல்லாமல் கர்த்தருக்கு பணிவிடை செய்யும் சேவர்கள் என்று நாம் நம்மை உணரும் போது நம் வாழ்வில் கர்த்தர் தம்மை நிரப்புவார். நற்செய்தியில் அவர் உறுதி அளித்த பெரும்பரிசுகள் ஆனந்தத்தையும் மீட்பையும் தருவதை எதுவும் பறிக்க முடியாது.

அனைத்து தீமைகளையும் விலக்குகிறது. கர்த்தர் தரும் மன்னிப்பு, வாழ்வு, அன்பான பேரிரக்கம் நம் அனைத்து பிழைகளையும் நீக்குகிறது.

இதை எளிதாக நினைவில் கொள்ள சுலபமான வழி மீட்சி பாடலை நினைவில் கொள்வதே ஆகும்.

இயேசுவே, நீர் சிலுவையில் மரித்தீர்
உயிரோடு எழும்பினீர் என்னை மீட்கவே
என் பாவம் எல்லாம் இப்போ மன்னியும்
கர்த்தராய், மீட்பராய், நண்பராய், என்னில் வாரும்
என் வாழ்வை மாற்றி புதிதாக்கும்
கர்த்தரே, அருள் செய்யும் உமக்காய் வாழ

மேலும் ஆராயுங்கள்

யோவான் அதிகாரம் 17 வாசிக்கவும், உமக்காகவும் எமக்காகவும் இயேசு உயிர் மரிக்கும் முன் செய்த பிரார்த்தனையின் பதிவாகும். இயேசு கூறிய வார்த்தைகளில் உங்களுக்கு மிகவும் ஆர்வம் ஊட்டும் வார்த்தைகளை குறித்துக் கொள்ளுங்கள், மற்றொரு கிறிஸ்துவ நண்பருடன் அதை வாசித்து அது குறித்து கலந்துரையாடுங்கள். உங்களது மனதளவில், இயேசு உங்களுக்காக பிரார்த்திப்பதை எவ்வாறு நோக்குகிறீர்கள்?