மொழிகள்

பாடம் 6 காணொளி

பாடம் 6

கிறிஸ்துவுடனான உங்கள் பயணத்தை நீங்கள் இன்னும் தொடங்கவில்லை என்றால் நீங்கள் வெகு விரைவில் மனம் தளர்வீர்கள். அவர் உங்களுக்கு வழிக்காட்ட இருக்கிறார், என்பதே அதற்கான காரணம்.

நீங்கள் மனம் தளரும் போது, நினைவில் கொள்ளுங்கள், கர்த்தர் அனைத்தையும் விட வலிமையானவர்— உங்களது பலவீனங்கள் உட்பட. அவர் உங்கள் வாழ்வை மாற்றி அமைக்கிறார், புதுபிக்கிறார் என்று உறுதியாக நம்புங்கள்.

நாம் தோல்வியுற்று தவிக்கும் போது, நாம் நிர்கதியற்றவர்களோ என நம்புவதற்கு உந்தப்படுகிறோம். நாம் நமது நல்ல குணத்தின் காரணமாக வளர்ச்சி நிலை அடையாமல் இருக்கிறோம். ஆனால், நமது நல்ல குணத்திற்கு நாம் காரணமல்ல. கிறிஸ்து மீது நாம் கொள்ளும் விஸ்வாசம், அவர் பால் கொள்ளும் அன்பு, வழிபாடு மற்றும் கீழ்படிதலின் காரணமாக அவர் நம்முள் செயலாற்றுவதே நமது நல்ல குணத்திற்கு காரணம்.

இங்கே, இப்பொழுது நாம் ஒரு தீங்கான முடிவை எடுப்பதிலிருந்து தடுக்க கிறிஸ்துவின் ஆற்றல் வல்லமை பொருந்தி்யதா? ஆம் நிச்சயமாக! நம் வாழ்வின் அனைத்து நன்மைகளும் அவரிடமிருந்தே வருகின்றன. நாம் கொண்டுள்ள விஸ்வாசம், செலுத்தும் அன்பு மற்றும் மேற்கொள்ளும் முயற்சியின் ஊடாக அவர் செயல்பட்டு நமது நன்னடத்தையை அவர் வெளிகொணார்கிறார்.

தீங்கிலிருந்து உங்களை விலக்கி வைக்க அவர் சித்தமாயிருக்கிறாரா? அதை நீங்கள் துளியும் சந்தேகப்பட வேண்டாம்!

அப்படி என்றால் செயல்திறன் அற்றவர்களாக நம்மை நாம் ஏன் உணர்கிறோம்? அவரை நாம் சார்ந்து இருக்க வேண்டும் என்பதாலேயே அவர் நம்மை பலவீனர்களாக உணரச் செய்கிறார். உங்கள் பலவீனம் உங்களை முட்டாளாக்க அனுமதிக்காதீர்கள். அதற்கு பதில், நீங்கள் கர்த்தரை பற்றிக்கொள்வதற்கும் கர்த்தர் உங்கள் பலமாக இருப்பதற்கும் அதுவே காரணமாக இருக்கட்டும்.

கர்த்தரை பற்றிக்கொள்வதை, கர்த்தர் மீது கொள்ளும் விஸ்வாசத்தை எது தடுக்கிறது? கர்த்தருக்கு கீழ்படியும் வலிமை நம்மிடம் இல்லை என்ற சந்தேகம் ஏன் திடிர் என வந்தது? அப்படி என்ன மாற்றம் நடந்தது?

நாம் கர்த்தர் யார் என்பதை மறந்தோம். நாம் அவருள் ஐக்கியமானவர் என்பதை மறந்தோம். நம்மை தீங்கிலிருந்து விலக்கி வைக்கும் வல்லமை அவருக்கு உள்ளது என்பதை சந்தேகித்தோம். நமது உள்ளம் அவரை விட்டு உண்மையாகவே விலகி அலைபாய்ந்து செல்ல அனுமதித்தோம்.

கடைசி தவறே நம்மை பாதிக்கும் அளவுக்கு மிக கேடானது. ஒவ்வொரு தீங்கான தவறும் கிறிஸ்துவிடமிருந்து நமது உள்ளங்களை விலகி செல்ல அனுமதிப்பதிலிருந்தே தொடங்குகிறது. அதனாலேயே , ஒவ்வொரு நாளும் பைபிள் வாசிப்பது, பிரார்த்தனை செய்வது மற்றும் வழிபாடு செய்வது ஆகிய பழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம் என கருதப்படுகிறது. காரணம் நமது மனம் அலைபாயும் இயல்புடையது, மனம் சறுக்கியதால் ஏற்பட்ட விளைவுகளை மறக்கும் அளவு மறதியை கொண்டிருக்கிறோம்.

கர்த்தரே நம் வாழ்வு என்பதை நாம் ஒரு போதும் மறக்கக் கூடாது. மீட்பு பாடல் கீழ்காணும் சொற்றொடரை பயன்படுத்துகிறது, “என் வாழ்வை மாற்றி புதிதாக்கும்.” நாம் கிறிஸ்துவை அறிந்த பின், நமது வாழ்வு முன்பு போல அப்படியே தொடரும், நிச்சயம் மேன்மையனதாக மாறும் என்று உறுதிபடுத்துகிறது. கிறிஸ்துவின் வல்லமையே அதற்கான நூறு சதவிகித காரணமாகும்.

உங்களுக்கு மிகவும் பிடித்த, பிரியமான நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாராவது இருக்கறார்களா? உங்களுக்கு ஏன் அவரை மிக பிடித்து இருக்கிறது? நீங்கள் மிக நல்லவர் என்பதால் அவரை உங்களுக்கு பிடிக்கிறதா?

ஒரு முறை, ஒருவரிடம் அவர் தன் மனைவியிடம் அன்பு கொண்டிருப்பதற்கு காரணம் அவர் நல்லவர் என்பதாலா என யாரோ ஒருவர் அவரிடம் கேட்டார். இது அந்த மனிதருக்கு மிக குழப்பமாகவும் கஷ்ட்டமாகவும் இருந்தது. அவர் அவள் மீது அன்பு செலுத்துவதற்கு காரணம் அவள் மிக அற்புதமானவள். அவர் அவள் மீது அன்பு செலுத்துவதற்கு அவர் நல்லவர் என்பது ஒரு பொருட்டே அல்ல. உண்மையில், அவர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நல்லவர் இல்லை என்பது அவருக்கே தெரியும், இருந்தும் தன் மனைவி தன் மீது அன்பு செலுத்துவதே, அவர் அவளை அதிகமாக நேசிப்பதற்கு காரணம்.

இயேசு மீது கொண்டுள்ள நேசமும் அது போல தான். நாம் எந்த அளவு நல்லவர் என்பது ஒரு பொருட்டே அல்ல. அவர் அற்புதமானவர் என்பதால் அவரை நாம் நேசிக்கிறோம். அவரது அற்புத குணங்களை நாம் ஒவ்வொரு நாளும் தியானிக்க வேண்டும். அவர் மீது நாம் கொண்டுள்ள நேசம் நமது எலும்புகளின் உள்ளேயும் நிரம்பி வழியும் வரை.

இதை உருவாக்கி வளர்த்து எடுக்க மூன்று நடைமுறை பயிற்சிகள் உள்ளன. அவை பைபிளை வாசிப்பது, பிரார்த்தனை செய்வது, வழிபாடு செய்வது.

இது செயல்படுமோ என்று நீங்கள் சந்தேகிக்கிறீர்களா?

கர்த்தர் உங்களை விட்டு விலகுவதுமில்லை அல்லது உங்களை ஒருபோதும் கைவிடுவதுமில்லை என்னும் கர்த்தரின் சத்தியத்தை வாசிக்கவும். உங்களுள் அவர் தொடங்கிய நற்பணியை அவர் நிறைவு செய்வார். நீங்கள் அவரை வெறுத்தாலும் அவர் உங்கள் மீது நேசம் கொண்டு உங்களை தேர்ந்தெடுத்தார். நீங்கள் அவர் மீது கொண்டுள்ள அவநம்பிக்கை மற்றும் நீங்கள் விரும்பி செய்யும் தீங்கு தவிர வேறு எதனாலும் அவரது அன்பிலிருந்து உங்களை பிரிக்க முடியாது, அவர் உங்களை மன்னித்து ஏற்றுக் கொள்வார்.

அவர் உங்கள் மனதை புதுப்பிக்க முடியுமா என்று நீங்கள் சந்தேகிக்கும் போது, நினைவில் கொள்ளுங்கள், அவர் தமது வார்த்தையின் மூலமாகவே இதை செய்கிறார். தீமையை மறுக்கும் ஆற்றல் உங்களுக்கு இருக்கிறதா என்று நீங்கள் சந்தேகிக்கும் போது, இதற்கு முன்பு எத்தனையோ முறை தீங்கை கடந்து வருவதற்கான ஆற்றல் உங்களுக்கு வழங்கப்பட்டிருந்ததை நினைவில் கொள்ளுங்கள். அவர் மீது உங்களால் அன்பு செலுத்த முடியுமா என்று உங்களை நீங்கள் சந்தேகிக்கும் போது, அவர் மிக அற்புதமானவர், அவர் மீது அன்பு செலுத்தாமல் இருப்பது முடியாத காரியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களால் ஏதாவது நன்மை செய்ய முடியுமா என்று உங்களை நீங்கள் சந்தேகிக்கும் போது, உங்கள் வாழ்வின் அனைத்து நன்மை்களும் அவர் மூலமாகவே உங்களுக்கு வந்தன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கிறிஸ்து உங்களுள் நல்மாற்றத்தை நிகழ்த்துகிறார், தொடர்ந்து உங்களை புதுப்பித்துக் கொண்டிருக்கிறார் என்று உளமாற நம்பி தாழ்மையான பணிவிலும், அன்பிலும் கீழ்படிதலிலும் திளைத்து இருங்கள்.

கர்த்தரின் பரிசுத்த ஆவி நம்முள் ஜீவித்து இருக்கிறது. நம்மால் கவனித்து உணர முடியாத வகைளில் நம்முள் கனிவுடன் மாற்றம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. கருவில் இருக்கும் குழந்தை தன் தாயின் இரத்தத்தை பகிர்வது போல நாம் கர்த்தரை பகிர்ந்து கொள்கிறோம். தாயும் சேயும் தனி தனி உயிர்கள் என்றாலும், அவர்கள் வாழ்வு பேரழகுடன் ஒன்றுபட்டு இருக்கிறது. இது போலவே, இயேசுவின் இரத்தம் மூலமாக, பரிசுத்த ஆவி நமது ஆன்மாவை ஜீவிக்கிறது.

நாம் பிரார்த்தனை செய்யும் போதும் வழிப்பாடு செய்யும் போதும் நம்முள் நாம் உணர்வது கர்த்தரின் பரிசுத்த ஆவியையே. அவருடைய பரிசுத்த ஆவி நம்முள் ஜீவித்து இருப்பது என்பது அன்றாட வாழ்வின் நிதர்சன உண்மையாகும். அவருடைய ஆவி நம்முள் ஜீவித்து இல்லாத போது நாம் பலவீனர்களாக இருக்கிறோம். ஆனால், அவர் நம்முள் நிரம்பியிருக்கும் போது, அவரது பரிசுத்த ஆவி வேறு எதன் மூலமும் முடியாத அளவிற்கு நமக்கு வலிமையைத் தருகிறது.

மேலும் ஆராயுங்கள்

வாசிக்கவும் ரோமர் 12:1- 21. உண்மை விஸ்வாசத்துடன் நம் வாழ்வை நாம் கர்த்தரிடம் அர்பணிக்கும் போது நம்முள் நிகழக்கூடிய மாற்றங்களை இந்த வாசகங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆன்மீக புதுபிப்பு என்பது எப்படி இருக்கும் என்பதை ஒரு கண பொழுதின் பார்வையில் உணர்த்தும் வண்ணமாக அது இருக்கும். கர்த்தர் உங்களை எப்படி புதுப்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதை எழுதி பகிருங்கள். இப்பொழுது அவர் உங்களுள் எங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்? நீங்கள் வளர்ச்சியும் பக்குவமும் அடைவதற்கான பாதையில் அவர் உங்களுடன் எவ்வாறு பொறுமையுடன் துணையாக வருகிறார் என்பதை ஆழ்ந்து சிந்தியுங்கள். அவர் உங்கள் மீது கனிவுடன் நடந்து கொள்கிறார் என்பதற்கு ஏதேனும் அறிகுறியை கண்டீர்களா?