மொழிகள்

பாடம் 8 காணொளி

பாடம் 8

பைபிள் தேவனுடைய வார்த்தை என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அவர் யார், நாம் யார், நாம் எங்கிருந்து வந்தோம், நாம் ஏன் வாழ்கிறோம் என்பதை பைபிள் மூலம் தேவன் நமக்கு விளக்குகிறார். பைபிள் கொஞ்சம் சிக்கலானது. பைபிளை ஏதேனும் நடுப்பக்க்தில் இருந்து நாம் வாசிக்க ஆரம்பித்தால், நாம் குழப்பமடைவோம். ஏனென்றால், பைபிள் உண்மையில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்ட 66 தனித்தனி புத்தகங்களாகும்.

பைபிள் புத்தகங்கள் தேவனால் கூறப்பட்டவை. அதற்கும் மேல், புத்தகங்களின் உள்ளடக்கங்கள் உண்மை என்றும், அவை அவர் கூறியது என்றும் தேவன் உறுதிப்படுத்தினார். பல புத்தகங்கள் குறிப்பிட்ட மக்கள்களுக்காகவே எழுதப்பட்டன. ஆரம்பகால திருச்சபை இந்தப் புத்தகங்களைச் சேகரித்து, இப்போது நாம் பைபிள் என்று அழைக்கும் ஒற்றைத் தொகுதியாக அமைத்தது. அதனுடன் சேர்த்து, முன்னர் தேவன் மனிதனுடன் எவ்வாறு தொடர்பு கொண்டார் என்பதையும் கூறியுள்ளன.

பைபிள் வெவ்வேறு வகைகளில் எழுதப்பட்டுள்ளன. சங்கீதப் புத்தகம், உதாரணமாக, பாடல்கள் மற்றும் பிரார்த்தனைகளின் புத்தகம். இது முற்றிலும் கற்பனையால் எழுதப்பட்டவை. இருப்பினும், யோவான் சுவிசேஷம், இயேசுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வரலாற்றுப் படைப்பாகும்.

கலாத்தியர் மற்றும் எபேசியர் போன்ற நிருபங்கள் ஆரம்பகால திருச்சபை தலைவர்களால் குறிப்பிட்ட மக்கள் குழுக்களுக்கு எழுதப்பட்டவையாகும்.

ஏசாயா மற்றும் வெளிப்படுத்தல் புத்தகம் போன்ற தீர்க்கதரிசன புத்தகங்கள் உள்ளன—இது ஆரம்பகால கிறிஸ்தவ திருச்சபைக்காக முதலில் எழுதப்பட்ட நீண்ட, சிக்கலான தீர்க்கதரிசனம்.

இன்னும் இருக்கிறது, ஆனால் முக்கியமான புள்ளியை நீங்கள் புரிந்துக் கொண்டிருப்பீர்கள்.

பைபிள் இரண்டு ஏற்பாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டு புத்தகத்தில் இயேசு பிறப்பதற்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகள் எழுதப்பட்டுள்ளன மற்றும் புதிய ஏற்பாட்டு புத்தகத்தில் இயேசு பிறந்த பின் நிகழ்ந்த நிகழ்வுகள் எழுதப்பட்டுள்ளன.

பைபிளின் முதல் ஐந்து புத்தகங்கள் (பெண்டேட்ச்) உலகத்தின் ஆரம்பம், தேவன் இஸ்ரவேலர்களுக்கு அளித்த வாக்குத்தத்தங்கள் மற்றும் அவர் அவர்களை ஒரு தேசமாக எவ்வாறு உருவாக்கினார் என்பதை விளக்குவதற்காக இஸ்ரவேலர்களால் எழுதப்பட்டது.

பைபிள் முழுவதும் தேவனுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள வெவ்வேறு ஒப்பந்தங்கள் கூறப்பட்டுள்ளன. இவை உடன்படிக்கைகள் என்று அழைக்கப்படும். இன்று நாம் இயேசுவின் உடன்படிக்கையின் கீழ் வாழ்கிறோம். அதாவது, யூத மக்கள் பின்பற்றிய தேவனின் பழைய உடன்படிக்கைகளில் ஒன்றான லேவியராகமம் அல்லது உபாகமம் போன்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ள சடங்குகளை நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. சடங்குகள் இயேசுவை சுட்டிக்காட்டும் அடையாளங்களாக செயல்பட்டன, எனவே சடங்குகள் அவரது வாழ்க்கை மற்றும் இறப்பு என இரண்டிலும் நிறைவேற்றப்பட்டன.

உங்கள் தலை சுற்றுவதுப் போன்று உணர்வு ஏற்பட்டால், சிறிது நேரம் எடுத்து மூச்சு விடுங்கள். பின்னர் உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனென்றால் நீங்கள் இப்போது அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை!

பைபிள் ஒரு கடமையைப் போல நீங்கள் வாசிக்க வேண்டிய புத்தகமல்ல. இது நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று. இது உங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாசிக்க வேண்டிய விஷயமாகும். இது உங்கள் மனதையும் இதயத்தையும் மாற்றும் ஒரு பொக்கிஷம்.

பைபிளின் சில பகுதிகள் மற்ற பகுதிகளை விட எளிதாக புரிந்து கொள்ளக்கூடியவை. ஆதியாகமம் (பைபிளின் முதல் புத்தகம்) மற்றும் நான்கு சுவிசேஷங்களில் (மத்தேயு, மாற்கு, லூக்கா அல்லது யோவான்) குறைந்தபட்சம் ஒன்றை வாசிப்பதன் மூலம் தொடங்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

அதன் பிறகு, யாத்திராகமம், அப்போஸ்தலர் புத்தகம் மற்றும் புதிய ஏற்பாட்டில் உள்ள நிருபங்களை வாசிப்பது சரியானதாக இருக்கும்.

ரோமர்கள் மற்றும் எபிரேயர்கள் வாசிக்க கடினமாக இருக்கும் இரண்டு புத்தகங்களாகும், ஆனால் அவை இயேசுவின் புதிய உடன்படிக்கைக்கும் பழைய ஏற்பாட்டில் உள்ள பழைய உடன்படிக்கைகளுக்கும் உள்ள வித்தியாசத்தையும் தெரிந்துக் கொள்ள உதவுகின்றன.

பைபிளில் பல சுவாரஸ்யமான கதைகள் உள்ளன. யூத மக்களுக்கான விரிவான பரம்பரை மற்றும் சிக்கலான சட்டங்களின் பிரிவுகளும் விவரிக்கப்பட்டுள்ளன. பைபிளின் ஒவ்வொரு பகுதியும் ஒரு நல்ல நோக்கத்தைக் கொண்டுள்ளது மற்றும் அதனை வாசிப்பது பயனுள்ளது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம், ஏனென்றால் நாம் யார், அவர் யார், எப்படி வாழ வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள பைபிள் உதவுகிறது. அது நம்மை தீமையிலிருந்து பாதுகாக்கிறது. எனவே, உங்கள் பைபிளை வாசிப்பதிலிருந்து உங்களை தொடர்ந்து தடுக்கும் விஷயங்களிலிருந்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் தொலைபேசி, வீடியோ கேம்கள் போன்றவை.

உங்களிடம் பைபிள் இல்லையென்றால், நீங்கள் ஒன்றைப் பெற வேண்டும்.

ஒரு வருடத்தில் முழு பைபிளையும் வாசிப்பதற்கான திட்டங்கள் உள்ளன, மேலும் இவை உங்களுக்கு உதவியாக இருக்கும், ஏனெனில் அவை தினமும் சிறிய பகுதிகளை வாசிக்க வைக்கின்றன.

நீங்கள் நிறைய வாசிக்க விரும்பினால், தொடர்ந்து வாசியுங்கள். ஆனால் தேவனுடைய வார்த்தையை பின்பற்றுவதற்கு கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துவது நல்லது. இது ஊக்கம் மற்றும் ஞானத்தின் ஒரு நிலையான ஆதாரமாகும், மேலும் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கான உங்கள் திறன் நேரடியாக உங்கள் இதயத்துடனும் மனதுடனும் பைபிளை எவ்வாறு ஈடுபடுத்துகிறீர்கள் என்பதோடு நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.

பைபிளைப் புரிந்துகொள்ள உதவுமாறு தேவனிடம் கேளுங்கள். அவருடைய கட்டளைகளை உங்கள் அன்றாட வாழ்வில் செயல்படுத்த உதவுமாறு அவரிடம் கேளுங்கள். அதனை வாசிப்பதையும் அதன்படி செயல்படுவதையும் அலட்சியப்படுத்தாதீர்கள். இதை எப்போதும் மறந்து விடாதீர்கள். நீங்கள் ஒரு வாசகர் என்று நீங்கள் நினைக்காமல் இருக்கலாம், ஆனால் பைபிள் விரைவில் உங்கள் பொக்கிஷமான உடைமையாக மாறும், ஏனென்றால் அது உங்களுக்கு தேவனின் வார்த்தைகள்.

மேலும் ஆராயுங்கள்

ஒரு பைபிளைப் பெற்று, “ஒரு வருடத்தில் பைபிளை வாசிப்பதற்கான” திட்டத்தைக் கண்டுபிடித்து, அந்த வாசிப்புத் திட்டத்தைப் பின்பற்றத் தொடங்குங்கள்.