பாடம் 5
நாம் தீமையை விடுத்து கர்த்தரிடம் திரும்பும் போது, அவர் நம் வாழ்வை வழிநடத்துவார். அவர் நம் ஜீவனாக மாறுவார். அவரை நாம் ஆனந்தமாக பருகலாம். வாழ்வு குறித்த நம் பார்வையை அவர் மாற்றுவார். நம் மனதை புதுப்பித்துக் கொள்ளும் செயல்பாடு என்று பைபிள் இதை குறிப்பிடுகின்றது.
இந்த மாற்றம் மூன்று தலையாய வழிகளில் நிகழும் என்று ஆண்டவரை மூன்று வெவ்வேறு பாத்திரங்களில் பைபிள் சித்தரிக்கின்றது: மீட்பராக, கர்த்தராக மற்றும் நண்பராக.
இறப்பிற்கு முன்னும் இறந்த பின்னும், இயேசு, ஒரு மனிதர் தான் என தெளிவுபடுத்த பைபிள் கவனம் கொள்கின்றது. அவர் தம் சீடர்களையும் தம் பால் அன்பு கொண்டவர்களையும் “நண்பர்கள்.”[2] என்று அழைத்தார்.
இயேசு, இறப்பிலிருந்து உயிர்த்தெழுந்த பின், தம்மை கொன்றவர்கள் எவ்வளவு தவறிழைத்தார்கள் என்று எதையும் காண்பிக்கவில்லை. அதற்கு பதிலாக, தம் நண்பர்களோடு காலை உணவருந்தினார், உடன் நடந்து சென்றார், இரவு உணவு வேளையிலும் கலந்து கொண்டார். இன்னொரு கூற்று பதிவின் படி, அவர் தம் நண்பர்களிடையே ஒரு வீட்டில் தோன்றினார், தமது இரத்த காயங்களை அவர்களிடம் காண்பித்தார், அவர்களுடன் உணவருந்தினார்.
ஒரு நெருங்கிய தொடர்பு உறவை ஏற்படுத்துவதே தாம் பூமிக்கு வந்ததன் முக்கிய காரணம் என்று காண்பிக்க விரும்பினார்.
அனைத்துக்கும் காரணமான கடவுள் நம்மை அவர் நண்பர் என்று அழைக்கிறார். நாம் அவர் பால் அன்பு செலுத்தி பணிவிடை செய்வது போல, அவரும் நம் மீது அன்பு செலுத்தி பணிவிடை செய்கிறார். முறிந்துவிடாத நட்புடன் அவர் நம்முள் வாழ்ந்து வருகிறார். நாம் ஒருவருக்கு ஒருவர் அன்பும் மதிப்பும் தருகிறோம்.
அவர் மீது அன்பு செலுத்தி அவர் தம்மை பற்றி கூறுவதை நீங்கள் உளமாற நம்புவீர்களேயானால், உங்களிடமுள்ள எல்லா தீமைகளையும் நீங்கள் கைவிடுவீர்கள், அவரது அன்பையும் வல்லமையையும் உங்கள் வாழ்வில் அனுபவித்து உணர்வீர்கள்.
நாம் அவரது நட்புணர்வை அனுபவித்து உணர வேண்டும் என்றால், அவர் நம்மை தீமையிலிருந்து விடுவிக்க வேண்டும், நம் வாழ்வின் மையமாக அவர் விளங்க வேண்டும், அது அவர் விருப்பத்தால் மட்டுமே நிகழும். நமது மீட்பராக, நம்மை தொடர்ந்து மன்னிக்கிறார், விடுவித்துக் கொண்டிருக்கிறார். அவற்றை, நாம் முந்தைய பாடங்களில் பார்த்தோம்.
இயேசுவை கர்த்தராக எப்படி அறிவது?
முழு அதிகாரத்துடன் நம்மை வழிநடத்துபவரே கர்த்தர் ஆவார். அவர், “இதை செய்யுங்கள்,”என கட்டளையிடுகிறார், அவர் அடியார்கள் அதை உடனே ஏற்கிறார்கள். அவரே நம் கர்த்தர் என்று பைபிள் கூறுகிறது.[7] கர்த்தருடனான நட்புறவிற்கு இது ஒரு இனிறியமையாத தேவையாகும்.
குழப்பிக் கொள்ளாதீர்கள். நாம் பல்லை கடித்துக் கொண்டு விருப்பமின்றி அவர் கட்டளையை ஏற்பதை அவர் விரும்பவில்லை. நீண்ட காலம், பல்லை கடித்துக் கொண்டு அவர் கட்டளையை ஏற்கும் எத்தனையோ பேர்கள் மீது, கர்த்தர் கோபம் கொண்டிருக்கிறார். அதற்கு பதிலாக, கர்த்தர்க்கு பிடித்த வாழ்வை வாழவேண்டும் என்று அவர் கட்டளையை ஏற்பதை அவர் விரும்புகிறார். நம் வாழ்வில் உண்மை அன்பையும் முழு விஸ்வாசத்தையும் விருப்பமுடன் அளிப்பதை விரும்புகிறார். விருப்பமின்றி, கட்டாயத்தின் பேரில், ஈடுபாடின்றி அளிப்பதை அவர் விரும்பவில்லை.
உங்கள் வாழ்வில் அவர் கட்டளைக்கு கீழ்படிந்து இணங்க நீங்கள் விரும்பவில்லை என்றால், கர்த்தர் யார், உங்களைப் பற்றி அவர் கூறுவது என்ன, அவர் என்னவெல்லாம் உங்களுக்கு செய்திருக்கிறார் என அவர் தமது வார்த்தையில்(பைபிளில்) கூறுவதை தியானியுங்கள். அதன் பின், அவர் மீது உங்களுக்கு ஏற்படும் அன்பை பின்பற்றுங்கள். [12]
ஒருவர் மீது ஏற்படும் அன்பை எவ்வாறு பின்தொடர வேண்டும் என்பதற்கான நிஜவாழ்வு உதாரணம் இதோ. காதலர்கள் மணந்து கொள்ளும் போது, ஒருவர் மீது ஒருவருக்கு, உடனே அளவு கடந்த பாசம் ஏற்படுவது இல்லை. ஆனால், அவர்கள் ஒருவரை ஒருவர் அன்போடும் கனிவோடும் நடத்திக்கொள்ளும் போது, ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் பாசம் வளரும்.
மனைவி கணவனுக்கு ஒரு பரிசை வாங்குகிறாள். அதை தரும் போது, அவள் கணவன் தந்த அன்பை நினைவு கூர்கிறாள். அந்தப் எளிய பரிசு பொருளை திட்டமிட்டு வாங்கும் போது, அதில் பெயர் அட்டையை எழுதி ஒட்டும் போது, அவன் மீது அவள் கொண்ட பாசம் வெளிப்படுகின்றது. அவனது அன்பின் சாரத்தை அவள் உணர்கிறாள், அவள் இதயத்தில் அவன் மீதான அன்பு வளர்ந்து அவன் மீது உண்மை நம்பிக்கை கொள்கிறாள்.
இயேசு என்பவர் யார், அவர் நமக்கு ஆற்றிய நன்மை என்று நாம் நினைவு கொள்ளும் போது, நம் இதயத்தில் அவர் மீதான உண்மை அன்பு மலரும். அதன் வெளிப்பாடாக, அவர் நம் ஆசைகளை மாற்றுகிறார், அவர் யார் என்று உணர்ந்து அவர் மீது அன்பும் விஸ்வாசமும் கொண்டு அவர் கட்டளைக்கு கீழ்படிவதற்கான வலிமையை நமக்குத் தருகிறார்.
கர்த்தர் நமக்கு அளித்துள்ள உறுதிமொழிகள், நமது வாழ்வில் நிஜமாக வேண்டும் என்றால், நாம் அவர் மிது கொண்ட அன்பை செயல்படுத்த வேண்டும். அவரது வார்த்தைகளை வாசிக்க வேண்டும், அவரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும், அவரது கட்டளையை முழு மனதுடன் ஏற்று கடைபிடிக்க வேண்டும். அவரை நம் மீட்பராக, கர்த்தராக மற்றும் நண்பராக கருதி நாம் அவர் மீது கொண்ட ஈடுபாடு வளரும் போது, நமது மனப்பான்மை நல்விதமாக மாறும்.
இந்தச் செயல்பாடுகள் எல்லாம் மிக முக்கியம். காரணம், கடவுள், அவற்றின் ஊடாக நம்மை நாம் யார் என்று நமக்கே மாற்றி அமைத்துக் காட்டுகிறார். நாம் அவரை மீட்பராக, கர்த்தராக மற்றும் நண்பராக முழு விஸ்வாசத்துடன் அடையாளம் காண, அவர் நம்மை உள்ளிருந்து மலரச்செய்கிறார்.
மேலும் ஆராயுங்கள்
கொலோசெயர் 1:15-23 வாசிக்கவும். நீங்கள் இயேசுவை மீட்பராக, கர்த்தராக மற்றும் நண்பராக பின்பற்றுவது ஏன் என்று இன்னும் கேள்விப்படாத உங்கள் பிரியமானவர்கள் பெயர்களை ஒரு பட்டியலாக எழுதுங்கள். கர்த்தர் உங்கள் வாழ்வை எவ்வாறு மாற்றி அமைத்தார் என்பதை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பிற்காக கர்த்தரிடம் பிரார்த்தனை செய்யுங்கள். கர்த்தர் அவர்களது இதயத்தையும் திறக்க பிரார்த்தனை செய்யுங்கள். அவர் வாய்ப்புகள் வழங்கி நீங்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறீர்களா?